அஷ்டலஷ்மி யோகம்

அஷ்டலக்ஷ்மி யோகம்

யோகங்களில் சிறப்பான யோகமாக இந்த அஷ்டலக்ஷ்மி யோகத்தை கொள்ளலாம். ராகு ஆறாமிடத்தில் நின்று குரு லக்ன கேந்திரம் அடைந்து நிற்பது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும். பொதுவாக ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் போன்ற இயற்கை பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் நிற்பது நன்மையே செய்யும். ருண ரோக சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் நிற்பது அந்த இடத்தை நசிந்து போக செய்யும். அதனால் எதிர்ப்பு இல்லாத ஒரு வாழ்கையை அவர் அனுபவிப்பார், அதையும் மீறி எதிரிகள் வருவாரானால் அவர்களுக்கு அது சற்றேறக்குறைய அது அந்திம காலமாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல. குரு பகவானானவர் கேந்திரத்தில் நிற்பது தனித்த குருவாக இல்லாமல் இருப்பதே நல்லதாகும். குரு தனித்து இருந்தால் கிரந்தங்கள் கூறுவது
அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு "

என்பதேயாகும். இதிலிருந்து குரு தனித்து நிற்பது என்பது சுபமல்ல என்பது விளங்கும். இந்த குருவும் கேந்திரத்தில் நின்று ஆறாமிடத்தில் ராகு நிற்பது அஷ்டலஷ்மி யோகம் என்பதே!! இதன் பலன் மிகுந்த தனப்ரப்தம் உண்டு என்பது வெள்ளிடை. ஒருவன் தனம் பெற்றாலே மற்ற அனைத்துமே அவன் கைவரப்பெறும். இதனால் புகழ், சொத்து, செல்வாக்கு, சம்பத்து, ஆயுள், தோட்டம், வீடுகள் நில புலன்கள் போன்றவை கிடைக்கும். இதனால் இம்மாதிரியான ஜாதகர்கள் பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரியுமளவுக்கு செல்வாக்கான வாழ்கையை பெறுவார்கள். இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு வெகுஜன தொடர்பு, தேக காந்தி ஆகியவைகள் தானாகவே வரும்.