தமிழ் மாதம் அளவுகள்

1.தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும்.

4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடுதொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்