சுக்கிர பகவான்"சுக்கிரன் கடைக்கண் பார்வை சூழ்ந்திட பெற்றவர்க்கு
அக்கரை ஏதுமில்லை அனைத்துமே அவர்க்கே சொந்தம்
பக்தியாய் பணிவோர்க்கு எல்லாம் புரிகுவான் அருளாம் மாரி
சக்தி சேர் சுக்கிரன்றனை சந்ததம் துணை கொள்வோமே!"

"சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே"

"வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக"