சமயபுரம் மாரியம்மன்
"மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே
மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா
தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே
காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா
வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர
ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா
சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
பேரு மறியேனம்மா பெற்றவளே யென்தாயே
தப்புப்பிழை வந்தாலும் சங்கரியே நீபொறுத்து
ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம்
மனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்
தேவி மனம்பொறுத்து தீர்க்கமுடன் ரட்சியம்மா
போட்டமுத்து நீயிறக்கும் பொய்யாத வாசகியே
பொய்யாத வாசகியே புண்ணியவதி ஈஸ்வரியே”