தமிழர்களின் மாத அளவுகள்

தமிழர்களின் மாத அளவுகள்:

பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் சூரியனின் 30பாகை பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. ஒவ்வொரு ராசியும் 30 பாகை (12x30 = 360 பாகை). தமிழ் மாதங்களின் கால அளவுகள்.

சித்திரை மாதம் - சூரியன் வான் உச்சியில் வரத் தொடங்கும் மாதம்

உத்திராயனம் :
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, இம்மாதங்களில் சூரியன் வடக்கு நோக்கி வலம் வருவார். இதற்கு மேடவீதி என்றும் பெயர். தேவருக்குரியது.

தக்ஷிணாயனம் :
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, இம்மாதங்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வலம் வருவார். அசுரருக்குரியது.

இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.