நட்சத்திர பழமொழிகள்
மூலத்தான்:-
ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பிறகு நான்காவது ஆண் குழந்தை பிறந்தாலும் அதுவும் மூலத்தான். ஐந்தாவது பெண் போகுமிடம் சிறப்பாக இருக்கும். ஆறாவது ஆண் பெருமை தரும். ஏழாவது பெண் இறப்பு. எட்டாவது ஆண் எட்டிப்பார்த்த இடம் குட்டிச்சுவர். பத்தாவது ஆண் மதி குறையச் செய்யும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்.
பூராடம்:-
பூராடம் பெண் பிறந்தால் நன்மையல்ல, பூராடம் போராடும் போகுமிடம் வாயாடும். பூராடம் ஆண் நன்மை, பூரட்டான் ஊராடான். பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முப்பது வயதிற்குள் குழந்தை பிறந்தால் உண்டு. இல்லையேல் இல்லை.
கேட்டை:-
கெட்ட குடிக்கு கேட்டை பிறந்தது. கேட்டையில் பிறந்தவன் மனதில் கோட்டை கட்டி வாழ்வான். கேட்டையில் பிறந்து நல்வழியில் வாழாது. கேட்டையில் பிறந்த பெண் மூத்த மருமகளானால் நன்மை.
ஆயில்யம்:-
ஆயில்யத்தில் மாமியார் ஆசாந்தியாள் (நோய் வாய்பட்டவள்)). ஆயில்யம் பெண்னை திருமணம் செய்தால் மாமியார் போல் சொல் பலிதம் ஆகும். மாமியார் சீக்காக இருந்தாலும் ஆயில்ய பெண் மருமகளாக வரும்போது பிழைத்து கொள்வாள்.
அவிட்டம்:-
அவிட்ட மகளை அந்நியனுக்க கொடேல். அவிட்டத்தில் பிறந்த பெண்னை சொந்தத்திலேயே கொடுக்க வேண்டும்.
மகம்:-
மகமகள் ஜகம் ஆள்வாள். மகத்தில் பெண் பிறப்பது சிறப்பு.
உத்திராடம்:-
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு கொள்ளையும். உணவுக்கு பஞ்சமில்லை. இவர் குடும்பத்தில் தம்பி தங்கைகளுக்கு நல்வழி காட்டுவார்.
உத்திரம்:-
உத்திரத்தில் ஒரு பிள்ளை ஊருக்கெல்லாம் தொல்லை. கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைவதால் உத்திரப்பிள்ளை தொல்லை அதிகம் கொடுக்கும்.
அஸ்தம்:-
அஸ்தத்தில் அப்பன் தெருவிலே. குழந்தை பிறக்கும் முன்னே அப்பன் இறப்பான். இவர் மருமகளாக வந்தால் மாமனார் இருந்தால், மாமனார் கணவர் இருவருக்கும் பிரச்சினை.
திருவாதிரை:-
திருவாதிரைக்கு ஒரு வாய் கனி. திருப்பி கேட்டால் கெடுப்பார் அடி. திருவாதிரையில் பிறந்தவர் ஒரு வார்த்தைக்கு மேல் பேசமாட்டார். திருவாதிரையில் திருடு போனால் திரும்பி வீடு வரும். திருவாதிரை நண்பர்கள் கூடாது.
பரணி:-
அடுப்புக்கு பாழ் போகாது. பரணியில் பிறந்தவர் சிறப்பாக இருப்பார். பெண் பரணி தரணி ஆளும்.
திருவோணம்:-
திருவோணத்தான் உலகை ஆள்வான். இவர் இறந்தாலும் புகழ் நிற்கும்.
சதயம்:-
சதயத்திற்கு சொல்புத்தி இல்லை. சொந்தபுத்தியும் இல்லை.
சுவாதி:-
சுவாதி பிறவா சம்பா விளையாது. சுவாதி என்ற சொல்லுக்கு சூரியன் என்று பொருள். கம்பீரமாக இருப்பார்கள். சுவாதி, விசாகம், மூலம், திருவோணம் (திருமண சடங்குகளுக்கு சிறந்த நட்சத்திரங்களாகும்).