ஜோதிட பழமொழிகள்

ஜோதிட பழமொழிகள்

1. உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன்.

2. நீசனை நீசன் பார்த்தால் உச்ச பலன்.

3. அஷ்டமசனி, ஜென்ம ராசிக்கு 8ல் கோச்சார நீதியாக சனி வரும்போது அதுவே அஷ்டம சனி ஆகும்.

4. அஷ்டம சனி அழுதாலும் விடாது.

5. அஷ்டம சனி வந்தது போல் கட்டுவதற்கு கூட துணி விட்டு வைக்காது.

6. அஷ்டம சனி பிடித்தும் கெட்டிக்காரத்தனம் போகவில்லை.

7. ராஜபார்வை இருந்தால் அஷ்டம சனி என்ன செய்யும்? (குரு பார்வை)

8. சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும் புருஷன் அகப்பட மாட்டான்.

9. சனீஸ்வரன் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாருமில்லை.

10. காசி, ராமேஸ்வரம் போனாலும் சனி விட்டபாடில்லை.

11. குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும்.
ஒரு குடும்பத்தில் கடைசி குழந்தை (பரணி, பூரம், பூராடம்) சுக்கிரன் சாரம். சுக்கிர தசை நிகழ்ந்தால் கேடு விளைவிக்கும். குட்டி சுக்கிரன் வடக்கே போனால் மழை பெய்யும். தெற்கே போனால் வெற்றி நிச்சயம். மேற்சொன்ன நட்சத்திரத்தில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்த போது குழந்தை பருவத்திலேயே தெற்கு பக்கம் இடமாற்றம் செய்தால் செல்வம், வடக்கு பக்கம் இடமாற்றம் செய்தால் விவசாயம்.

12. குறுக்கு வழியில் செல்வம் தருபவர் ராகு.

13. ராகுவைப் போல் கொடுப்பாருமில்லை, கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை.

14. மேஷம் - தகடோடு எகரேல். மேஷ ராசிக்காரர்களோடு மோதுதல் கூடாது.

15. ரிஷபத்தானோடு தோரேல். ரிஷப ராசிக்காரர்களோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.

16. மிதுனம் - தண்டு கொண்டு இல் புகேல்.
இவர்கள் புத்திசாலிகள் என்பதால் இவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

17. கடகம் - தண்டாலுக்கு இடம் கொடேல். எவ்வித பிரச்சினைகளையும் சாதுர்யமாக சமாளிப்பர்.

18. கன்னி - கன்னி மகனை கைவிடேல்.
கன்னி ராசி ஆண் மகன் எனத் தெரிந்தால் நட்புக்கும் உறவுக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். எனவே இவர்களின் நட்பை உதாசீன படுத்தவே கூடாது.

19. துலாம் - துலாத்தான் எவ்விடத்திலும் தோனான். துலாம் ராசிக்காரர்கள் எதிலும் துவள்வது கிடையாது.

20. விருச்சிகம் - தேளானை பேணிக்கொள். விருச்சிக ராசிக்காரர்களை பொன் போல் பாதுகாக்க வேண்டும்.

21. தனுசு - வில்லானை சொல்லால் வளை. தனுசு ராசிக்காரர்களை அன்பு சொற்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்

22. மகரம் - மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன். இவருடைய ஜால வார்த்தைகளுக்கு மயங்கவே கூடாது.

23. கும்பம் - கும்பத்தோன் குன்நின்று வெல்வோன். வெற்றியின் உச்சம் அடைய பாடுபடுவர்.

24. மீன மகனை விடேல். பொது நிகழ்ச்சிகளில் மீன ராசிக்காரர்கள் இருந்தல் நியாயமான தீர்வுகளுக்கு வழிவகுக்கும்.