போகர்


"சித்தான சித்து முனி போக நாதன் 
சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன் 
கத்தநேனும் காலாங்கி நாதர் சீடன் 
கனமான சீனபதிக் குகந்த பாலன் 
முத்தான அதிசயங்கள் யாவற்றும்தான் 
மூதுலகில் கண்ட முதல்வன் சித்தன் 
நித்தமுமே மாசில்லா கடவுள் தன்னை 
மாநிலத்தில் மறவாத போகர் தானே"

என்று அகத்தியரால் புகழப்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமியின் நவபாஷாண சிலையை தவமிருந்து வடிவமைத்த பதினெண் சித்தர்களில் ஒருவரும் , காளங்கி நாதரின் சீடரும், புலிப்பாணி சித்தரின் குருநாதரான  
நவநாயகர் போகர் ஆவார்.

இன்று அறிவியல் சொல்லும் பல விடயங்களை தன் 7000 பாடல்கள் மூலம் மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம் போன்றவற்றை  அன்றே சொன்ன  அதிசய சித்தன்.

சீனாவில் 'போ யாங்' என்ற சீனர் போகரின் அவதாரமாக  வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இவருடைய ஜீவ சமாதி பழனி மலையில் தண்டாயுதபாணி சுவாமியின் கோவிலின் தென்மேற்கு முலையில் அமைந்துள்ளது.

ஓம் ஸ்ரீ போகர்  சித்த குருசுவாமியே சரணம் சரணம்