அன்னை தெரேசா



இந்த கலிகாலத்தில் நமது கஷ்டத்தை கடவுளிடம் முறையிட்டால் அவர் வரமாட்டார்.
எதிர்பாராத விதமாக நமக்கு யாரவது உதவி செய்தால் அந்த கடவுளே உங்கள் உருவத்தில் வந்திருக்கிறார் என்று அவர்களுக்கு நன்றி கூருவோம் அதுபோல ஞானியாக , சித்தனாக, யோகியாக , புனிதராக நம்மிடையே வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதன் உருவத்தில் கடவுள் வந்து உதவி செய்வார். அப்படி சேவை செய்தவர்தான் புனிதர் அன்னை தெரசா.
நாடு வேறாகிலும் நம் மக்கள் என்று சேவை செய்தவர் இந்த மகான்.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர்.

“பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வரவேண்டுமானால் அத் துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.”

"நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்".

"உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை . ஒருவருக்கு கொடு .எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல . எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்" .

“எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும் ? “