அருள்மிகு சனிபகவான்
கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய் !
இரும்பின் உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்சசி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்ரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும் எழில்நீலா மனைவி யாவாள்
பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்பதென்று சொல்வார்.

குளிகனை மகனாய்ப் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்துப் பிடித்துக் கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச்செல்வாய் துணையாகி அருளைத் தாராய்.

அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே மன்னர்போல் வழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்.

மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனி என்றும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்தபோதும் இனிய நாள் ஆக மாற்று

 சனி பகவான் போற்றி!!!