ஸ்ரீ வாராஹி அம்மன்

ஸ்ரீ வாராஹி அம்மன்

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். 

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். 

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.



“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்

களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”

– திருமூலர்

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

           - அபிராமிபட்டர்

இருகுழை கோமனம் தான் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவனம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
                                              
                - வீரை கவிராச பண்டிதர்

வாராகி தாயை வணங்கி  அருள் பெறுவோம் !!!