சாமியே சரணம் ஐயப்பா !


தாய் மடியைத் தேடியங்கே 
தாவிவரும் கன்றுகளாய்
வாய்திறந்து பாடிவந்தோம் ஐயப்பா! உன் 
வாசலுக்கே ஓடிவந்தோம் ஐயப்பா 
நீயிருக்க உனது மக்கள் 
யார் முகத்தில் போய்விழிப்போம்?
சேய் முகத்தை பாராயோ ஐயப்பா! உன் 
திரு வருளைத் தாராயோ ஐயப்பா!

குழந்தை வடிவில் வந்து எமை ஆனந்த கண்ணீரில் நனையவைத்த ஐயப்பா !
உன்னை நினைக்கையிலே உடல் சிலிர்க்குதப்பா மணிகண்டா !

உன் நாமம் சொன்னாலே எனை நோக்கிய வினைகளெல்லாம் விலகுதப்பா அய்யனாரே !

பசிப்பிணியை போக்கும் அன்னதான பிரபுவே !

உம்மை வணங்குகிறோம் !!!

சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !