நில்லடா சந்திரனை மேலே கொண்டு
நினைவாகச் சூரியனை கிழே தாக்கி
நல்லடா அனுதினமும் மண்டலந் தான்
நயமாக பழக்கமது செய்வா யப்பா
வெல்லுவாய் வழிரெண்டு மொன்றாய்ப் போச்சு
வேதாந்த மௌனத்தில் சொக்கி நில்லு
தொல்லையறும் ஞானமென்ற வெளியைக் கண்டு
தோய்ந்தபொரு ளிதுவென்று நில்லு நில்லே !
நில்லடா ஓர்மனதா யிருந்து கொண்டு
நிராமயமாஞ் சொரூபமதி லடைவாய்க் காரு
சொல்லடா சிவத்தினிட பெருமை யென்று
சொக்கத்தே கன்னியுட மாயிக்கை தன்னில்
கல்லாத சித்தெல்லாங் கற்றே னென்று
கழறாதே கருமிகட்கு யிந்தப் போக்கு
மெல்லடா வனுதினமுந் தியான மாக
மேதினியில் சித்தெல்லா மாடுவாயே!!
- கருவூரார் அட்டமாசித்து.
விளக்கம்:
பெண் மயக்கத்தில் சிக்காமல் இடக்கலையை(சந்திரன்) பிங்கலையில்(சூரியன்) தாக்கினால்
சுழுமுனை திறக்கும், அப்போது மனதை சுழுமுனையில் வைத்து வந்தால், குண்டலி எழும்.
அக்குண்டலியை அணுதினமும் ஓர்மனதாய், மெளனமாக மேலே ஏற்றினால் சிவத்தின்
பெருமையை அறியலாம்.அதன் பின் அஷ்டமாசித்தியும் அடையலாம், சித்தும் ஆடலாம்.
இதை சுயநலவாதிக்கு சொல்லாதே என்று சித்தர் கருவூரார் கூறுகிறார்.