நீசபங்க ராஜயோகம்

நீசபங்க ராஜயோகம் - அமைப்பு:

ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால் அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்.

மேஷத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது

ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது

கடகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பது

கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது

துலாத்தில் சூரியனும், சனியும் சேர்ந்திருப்பது

மகரத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது

மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது

நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள்
சம்பந்தப் பட்ட வீடுகளை வைத்து
மிகப் பெரிய - அளவிடமுடியாத
நன்மைகளைச் செய்துவிடும்

அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்
தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான
பலன்களை அள்ளித்தந்துவிடும்!

ஒரு சிம்ம லக்கின ஜாதகம். அந்த ஜாகத்தின்
பத்தாம் வீட்டிற்குரிய சுக்கிரன் நீசனாகி கன்னி
ராசியில் அம்ர்ந்துவிடும் போது அங்கே புதன்
இருந்தால் - அது புதனுக்கு சொந்த வீடும்
உச்ச வீடும் ஆனதால் புதனுடன் சுக்கிரன்
சேர்ந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அந்த
ஜாதகன் பெரிய தொழில் அதிபர் ஆகிவிடுவான்

10க்குரிய சுக்கிரன் நீசமானதால் வேலையின்றி
ரோட்டில் திரிய வேண்டிய ஆசாமி, உச்ச புதன்
உடன் சேர்ந்ததால் பெரிய Business Magnet ஆகி
பணத்தில் புரளுவான். இதுதான் நீசபங்க ராஜ
யோகத்தின் பலன்

இதுவே 10ம் வீடாக இல்லாமல் 4ம் வீடான கல்வி
ஸ்தானமாக இருந்தால் ஜாதகன் பெரிய Scholar
ஆகி விடுவான். சாதாரண விரிவுரையாளராக
இருந்த அவனை இந்த ராஜயோகம் பல்கலைக்கழக
துணை வேந்தர் பதவிவரை கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்!

இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்
பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக
சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற
ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும்

அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டு
மானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின்
ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயமாக நிறைவேறும்!