யோகம்

வைதிருதி (வை):-
இது அசுபமான யோகமாகும்.இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கொடுப்பவர்கள். நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறுவார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள். நேர்மை இருக்காது. கடவுள் பக்தியைக் கூட வியாபாரமாக்கி காசு பண்ணிவிடுவார்கள். ஆதாயம் இல்லாமல் எதையுமே செய்யமாட்டார்கள்.கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள், தீய பழக்கங்கள் இருக்கும்.                                           யோகங்களின் பொதுவான பலன் தான் ஜாதக அமைப்புப்படி கிரகங்களின் நிலைகளின்படி குணாதிசியங்கள் மாறக்கூடும் என்ற போதிலும் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண்டு அவர்களிடம் இருக்கவே செய்யும். நட்சத்திரங்களின், திதிகளின், குணாதிசயங்களோடு, யோகங்களில் பிறந்த பலனும் இணைந்து காணக்கூடும்.