வெட்டுடையாா் காளி


தானம் வேள்வி தவங் கல்வியாவும் 
தரணி மீதி விலைபெறச் செய்வேன்,
வான மூன்று மழைதரச் சொல்வேன்;
மாறிலாத வளங்கள் கொடுப்பேன்;
ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;
நான் விரும்பிய காளி தருவாள்.
- பாரதியார்


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவிலில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.

அதாவது, அய்யனார் கிழக்கு நோக்கி இருக்க எதிரே சற்று தெற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காளியம்மன் உள்ளார். பெண்கள் தங்கள் கணவர் நலம்பெற வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.

பலர் தங்கள் கணவர் குணம் அடைந்ததும் தங்களுடைய தாலியை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டுகிறார்கள். அதன்படி குணம் அடைந்த பின் தாலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இப்படி ஆண்டுதோறும் தங்க தாலிகள் பல இங்கு காணிக்கையாக வருகின்றன.

தல வரலாறு

சிவன் பிட்சாடனாராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர்.

ஒரு சமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையார் காளி" என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே தலம் அழைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் இந்த ஊரில் அய்யனார் கோயில் தான் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர். மூத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்த கோயிலின் பூஜையை செய்து வந்தனர்.

ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீக வித்தைகளை கற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளை பயன்படுத்தினார். இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடையாா் காளியம்மன். ஈசச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையாா் அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையாா் காளி என்றும் பெயர் வந்தது.

நேர்த்திக் கடன் :

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

அமைவிடம்

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கையில் இருந்து 13 கி.மீட்டர் தூரத்தில் தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் இருந்து தெற்கே 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அரியாகுறிச்சி என்ற இடத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.


To wipe out bad things to make the bad people understand their faults the "God" - a supreme power took the incarnation of "Kali"- the destructive Goddess of evil in the world. The great saint Ramakrishna Paramahamsa was inspired by the Goddess Kali - who dwells in Calcutta. In the north of  India, many great men like Kalidasa - a great Sanskrit poet and Vikramaditya ? an honest king who ruled Ujjain worshipped "Kali" and got benefited.

History

Earlier, there was an Ayyanar temple only in this village. There is no trace of the person who built this temple. Two sons of a family – Kari Velar and Karuppa Velar were conducting the poojas in turns. Due to some difference of opinion between the two, the elder brother Kari Velar left for Kerala and returned back after some time learning Maantrika Vidya.

Kari Velar used some deities to perform his Maantrika vidya. During his turn of pooja to Ayyanar, he spread sand before the shrine and wrote some letters. He found that the letters belong to Kali and installed Her. She is the present Vettudaya Kali. Ayyanar was brought from Eechangadu. He is named Vettudaya Ayyanar.

Thanks
vettudayarkaliamman temple