தக்காளியே காணிக்கை

காரைக்குடி முத்துமாரியம்மன் 

1956 ஆம் ஆண்டு காரைக்குடி அருகில் மீனாட்சிபுரத்தில் உடலில் அம்மையுடன் சமயபுரத்திலிருந்து வந்த சிறுமி தான் சொன்ன வார்த்தையெல்லாம் அருள்வாக்காக வந்து பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
ஒரு சில நாட்களில் தன் உடலில் இருந்த அம்மை முத்தை போல் முளைத்து படுத்த படுக்கையானதை பார்த்து சிலர் கிண்டலடித்தனர் அதை சிறுமி பொருட்படுத்தவில்லை.

ஒருநாள் தன்னை கிண்டலடித்த ஒருவரை அழைத்து " உன் தோட்டத்தில் இருக்கும் தக்காளி செடியில் இருக்கும் ஒரே ஒரு தக்காளியை பறித்து வா " என்றார். அதற்கு அந்த நபர் மறுத்து தோட்டத்திற்கு சென்று தக்காளி செடியும் அதில் இருந்த ஒரே ஒரு தக்காளியை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த தெய்வ சிறுமியின் மகிமையை உணர்ந்தார்.  அத்தக்காளியை பறித்து கொண்டு வந்து கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றார். அன்று முதல் தக்காளியை பக்தர்கள் தங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். பிறகு ஒருநாள் அந்த தெய்வ சிறுமி " நான் முத்துமாரியாக இதே இடத்தில் அருள்பலிப்பேன். எனக்கு கோயில் அமைத்து வழிபட்டால் நோய்நொடிகள், திருமணத்தடை  நீங்கும்  , மனமகிழ்ச்சி கூடும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல பலன்கள் வீடு  தேடி வரும்." என்று கூறி முக்தியடைந்தார் .

அன்று முதல் முத்துமாரியாக அருள்பலித்து வருகிறார். சகல மதத்தவர்களும் வந்து முத்துமாரியை வணங்கி அருள்பெறுகின்றனர்.

மாசி மதம் திருவிழா மிக பிரமாதமாக நடக்கும். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்  அயல்நாட்டு தமிழர்களும் வந்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.

நாமும் முத்துமாரியம்மனை வணங்கி அருள்பெறுவோம் .

"ஓம் அம்மையேபோற்றி"
"ஓம் அம்பிகையே போற்றி"
"ஓம் ஆதி பராசக்தியே போற்றி"
"ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி"
"ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி"
"ஓம் ஏழையர் அன்னையே போற்றி"
"ஓம் பூமாரித்தாயே போற்றி"
"ஓம் முத்தாலம்மையே போற்றி"
"ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி"
"ஓம் தேசமுத்து மாரியே போற்றி"
"ஓம் தையல் நாயகியே போற்றி"
"ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி"
"ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி"