புதன் வாழ்க..!

மதனநூல் முதல்நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி !

புத்தியை கொடுக்கும் புத பகவானே ! 
எங்களை  திறமையாக பேசவைப்பதும் நீயே !
வார்த்தை உச்சரிப்பு தந்ததும் நீயே !
இயல் , இசை , நாடகம் நீ தந்த  பலமே !
கல்வியை தந்து அடையும் புகழும் நீயே !
கேட்டை, ஆயில்யம், ரேவதி  நாயகனே !
மிதுனம் , கன்னிக்கு அதிபதியே !
சூரியனுக்கு நெருக்கமான வித்யாகாரகனே !

உம்மை வணங்குகின்றேன் !
அருள் தருவாய் !