செந்நிறத்தோல் அழகனே !வைராக்கியம் தருபவன் நீயே !

பகைவரை வெல்லும் பராக்கிரம்  வழங்குபவன் நீயே !

ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன் நீயே !

அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் உனதே !

செவ்வாய் தோஷம் நீங்க  சனி, ராகு, கேதுவோடு சேர்ந்ததும் நீயே  !

குருவோடு நீ  சேர்ந்து  குருமங்கள  யோகம்  !

சந்திரனோடு நீ  சேர்ந்தால் சந்திரமங்கள யோகம்  !

அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர் உனக்கு !

நவக்கிரகங்களுள் மூன்றாவது இடம் உனது !

உடல் உறுதி, மன உறுதி தருகிறாய்  !

கண்டிப்பதும் நீயே  தண்டிப்பதும் நீயே !

செந்நிறத்தோல் அழகனே !

தூய்மையை விரும்புவோரின் நாயகனே !

பவளமே உனக்கான  ரத்தினம் !

உன்னுடைய அதிபதியே அந்த ஆறுமுகம் !

ஆட்டுக்கிடா வாகனனே !

அங்காரகனாக வைத்தீஸ்வரன் கோவிலில் அமர்ந்தவனே!