சந்திர பகவான்


"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி."


காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவனே!

ஸ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்பவனே !

முக அழகுக்கு மாதிரியாக இருப்பவனே !

கல்லைக் கரைத்தால் போல் கல் மனத்தையும் கரைப்பவனே !

புதனுடன் இணைந்து ஒழுக்க நெறி குணத்தைத் தருபவனே !

சூரியனுடன் இணைந்து சிந்தனை வளம் பெருக்குபவனே !

ராம ராஜ்ஜியத்தை உருவாக்கியவனே !

காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகிய  நான்கை அடக்குபவனே !

மனதில் சரியான  சிந்தனையைத் தந்து, வெற்றிக்கு வழி தருபவனே !

விதியை மதியால் வெல்லலாம் !!!

"ஓம் சந்திர பகவானே போற்றி "