தானாகத் தோன்றிய தெய்வம்


"குரு பிரஹ்மா;
குரு விஷ்ணு;
குரு தேவோ மகேச்வர;
குரு சாக்ஷ?த் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ"

முப்பெரும் கடவுளர்களில் ஒருவரான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர் 
ஆனால் சிவன், விஷ்ணுவை போல தனி கோவில் இல்லை 
சிவனுடைய சாபத்தால் தனக்கென்று கோவில் இல்லாமல் போனது .
இருந்தாலும் அவரை வணங்காமல் இருக்கமுடியுமா..! 
நம் தலையெழுத்தையே மாற்றுபவர். ஆகவே பிரம்மா தேவர் தன்  சாபம் நீங்க 
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அருகில் சிருகனுர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. வட மேற்கில்  திருப்பட்டூர் என்ற தலத்தில்
தவம் செய்து சாப விமோசனம் பெற்று தன்னை  வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அருள்பாலிக்கிறார்.

யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள்

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கும் அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி என்ற பெயரும்   பெயர் ஏற்பட்டது. புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை தலம்.
குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா. திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். 

 பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றி வழிபடுவோர் வாழ்வு சிறக்கும். அதனால் கூடுதல் நற்பலன்கள் கொடுப்பார். 

பிரம்மனை  தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார். 

நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

"ஓம் பிரம்மா தேவா போற்றி!"