தைப்பூசம்

பழனியில் ஆண்டியாய் நின்று ஞானம் பெற்று 
சுவாமி மலையில்  தந்தைக்கு உபதேசம் செய்து 
தாயிடம் வீரவேலை பெற்று செந்தூரில் வெற்றிவேலாக்கி 
தென்பரங்குன்றிலே இல்லறத்தில்  தேவசேனாவுடன் இணைந்து 
தணிகையிலே தனக்காக தவமியிருந்த குறத்தியை மணம் முடித்து 
பழமுதிர்சோலையிலே ராஜயோகியாகி ஓளவைக்கு பாடம் சொன்ன 
அறுபடையிலும் ஆட்சி செய்யும் ஆறுமுகனே !

தை  மாதம் பூசம் நட்சத்திரத்தன்று பராசக்தியிடம் வீ ரவேலை பெற்ற கந்தனை தைப்பூச தினத்தன்று வணங்கி அருள்பெறுவோம் .