ஞானத்தில் கலந்த தமிழன்

நக்கீரர்


"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று
பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா என்று இப்பாடலில் பொருட் குற்றம் கண்டு மதுரை சொக்க நாதர் (சிவன்) அஞ்சாது வாதிட்டவர் நக்கீரர். இன்றளவும் இந்த நிகழ்வு மதுரை மீனாட்சியம்மன் கோவில் விழாவில் நாடகமாகக்கப்படுவது குறிக்கத்தக்கது.

கி.மு 3 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தில்  பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர்.

37 பாடல்கள் நக்கீரர் பாடியதாக சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை வருமாறு:

பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர்.
அகநானூறு (17 பாடல்)
குறுந்தொகை (7 பாடல்)
நற்றிணை (7 பாடல்)
புறநானூறு (3 பாடல்)


சங்ககால வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இவர் தம் அகத்திணைப் பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார்.